கிருஷ்ணகிரி மாவட்டம், வண்ணாத்திபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயியின் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டில் இருந்த ராகி, நெல் மூட்டைகள் மற்றும் தங்கத் தோடு உள்ளிட்ட அனைத்து பொருள்களும் எரிந்து சாம்பலானதால் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள வண்ணாத்திபட்டி கிராமத்தை சேர்த்தவர் ஏழை விவசாயி மாதேஷன். இவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் மதியம் வேளையில் தீடீரென தீப்பற்றி எரிவதைக்கண்ட மாதேஷன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

ஆனால், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ மளமள என எரிந்ததில் வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்கத் தோடு, 6 மூட்டை ராகி, 8 மூட்டை நெல் உள்ளிட்ட வீட்டில் இருந்த டிவி. சமையல் பாத்திரம், சமையல் எரி வாயு அடுப்பு, பீரோவில் இருந்த துணிகள் மட்டுமன்றி ஆதார் கார்டு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை என அனைத்தும் எரிந்து சாம்பலானதைக் கண்டு விவசாயி மாதேஷன் வேதனையடைந்தார்.
பின்னர் இந்த தீவிபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், இந்த தீவிபத்தில் அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசம்மானது தொடர்பாக இது வரை வருவாய் துறையினர்களிடம் இருந்து இழப்பீடு ஏதும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது, இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி மாதேஷன் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் மூலம் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து தீ விபத்தினால் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது.

குறிப்பாக வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்கத் தோடு, 6 மூட்டை ராகி, 8 மூட்டை நெல் உள்ளிட்ட, வீட்டில் இருந்த டிவி, சமையல் பாத்திரங்கள், சமையல் எரிவாயு அடுப்பு, பீரோவில் இருந்த துணிகள் மட்டுமன்றி ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை என அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது. ஆகையால் இதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்க ஆட்சியர் முன்வர வேண்டும் என்று
கோரிக்கை விடுத்தார்.

செய்திகள் : மாருதி மனோ / கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed