ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அரியமான் கடற்கரை பகுதியில் ,தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையின் மூலம் சுற்றுலா வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    
நிகழ்ச்சியில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையேற்று ரூ.150 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
  
இதன் மூலம் அரியமான் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் அமைந்திடும் வகையில் மரவேலி அமைத்தல், தள மேம்பாட்டுப் பணிகள், நிர்வாகக் கட்டிடம் (உணவகம், கழிப்பறை, அலுவலகம்) குடிநீர் நிலையங்கள் , சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையில் 2021- 2022 மாநில அரசு நிதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் மேம்பாட்டிற்கு செயல்படுத்தப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
நிகழ்ச்சியில் , மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் துரைசிங்கம் , தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக உதவி செயற்பொறியாளர் சங்கர் , உதவி பொறியாளர் இஜாஜ் அகமத் , தொழில்நுட்ப உதவியாளர் வெங்கடேஷ் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed