கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து கோடைகால சிறப்பு நிதியாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கினார், இந் நிலையில் மகளிர் உரிமைத் தொகையுடன் கோடைகால சிறப்பு நிதி வழங்கியது போல மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும் என கடலூரில் கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நல சங்கம் சார்பில் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அறிவித்தார் இதன்படி தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதியாக ரூபாய் 2000 யை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடலூர் தலைமை தபால் நிலையம் பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட சிறப்பு தலைவர் வழக்கறிஞர் தி.ச. திருமார்பன் தலைமையில் தலைவர் சிவ. ரவிச்சந்திரன் ஒருங்கிணைப்பில், கடலூர் மாமன்ற உறுப்பினர் சரத் , திமுக மாநகர துணை செயலாளர் அகஸ்டின் பிரபாகரன், தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்ட தலைவர் சுப்பராயன், குணா, தீபக் முன்னிலையில் கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நல சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் இனிப்பு வழங்கி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஜெயகுமார், அனந்தநாயகி, குணசேகரன், கீதா,சம்பத், நீலா, தெய்வமணி பெருமாள், காமாட்சி, லட்சுமி, கவியரசன் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தமிழக முதல்வருக்கு இருகைகளையும் தட்டி தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed