கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஒரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு இவர் அதே கிராமத்தில் தனக்கு சொந்தமான வயலில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார்.

இந்த நிலையில் கதிர் விட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் மர்ம நபர்கள் நேற்று மாலை மக்காச்சோள வயலுக்கு தீ வைத்துள்ளனர்.

இதனால் வயல் முழுவதும் மக்காச்சோள கதிர்கள் தீயில் எறிந்து சேதமடைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்

இதுகுறித்து அருகில் உள்ள சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயி தனக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்காச்சோளம் வயலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

விவசாயி தற்போது கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார் நகை அடகு வைத்து மக்காச்சோள கதிர்கள் மூலமாக லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது வயல் முழுவதும் மக்காச்சோள கதிர்கள் தீயில் கருகி சேதம் அடைந்து விட்டதாக வேதனை அடைந்த வருகின்றனர்.

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தங்கள் வயலுக்கு தீ வைத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed