மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் (GRT) மற்றும் தமிழக போலீசார் இணைந்து தீவிர சோதனை, மதுரை விமான நிலையம் மற்றும் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் இன்று காலை 10:40 மணியளவில் மின்னஞ்சல் ல்மூலம் அனுப்பபட்டது.

மதுரை விமான நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தை பெடுகுண்டு வைத்து தகர்ப்பதாக செய்தி வந்தது அதனை அடுத்து மதுரை விமான நிலைய இயக்குனர் மத்திய தொழிலில் பாதுகாப்பு படை துணை கம்மாண்டண்ட் மற்றும் மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மதுரை விமான நிலைய உள்வளாகம் , வெளிவளாகம் வாகன நிறுத்துமிடங்கள் , பயணிகள் வாகனங்கள், வாகன சோதனை மையம் உள்ளிட்ட இடங்களில் தமிழகப் போலீசாரும் இணைந்து தீவிர சோதனைகள் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

மர்ம நபர்கள் அவ்வப்போது மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு விரட்டல் விடுவது வாடிக்கையாக உள்ளது இதனால் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்மற்றும் போலீஸார் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

செய்திகள் : காளமேகம் / மதுரை எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed