ராமநாதபுரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றதையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இத்தேர்வுக்காக , ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,099 மாணவர்களும், 7,527 மாணவியர்களும், தனித்தேர்வாளர்களாக 127 மாணவர் – மாணவியர்களும் என 14,753 மாணவர் – மாணவியர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 14,557 நபர்கள் தேர்வில் பங்கேற்றனர். அதில் 161 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவியர்கள் 67 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வுப் பணியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல். ரெஜினி தலைமையில் 67 தலைமை ஆசிரிய பெருமக்கள்,, 67 துறை அலுவலர்கள், 1330 ஆசிரிய பெருமக்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் 100 ஆசிரிய பெருமக்கள் கொண்ட கண்காணிக்கும் படைகள் நியமிக்கப்பட்டு அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
தேர்வு மையங்களில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதுடன் ஒவ்வொரு மையத்திற்கும் காவல்துறையின் உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர் – மாணவியர்கள் எவ்வித அச்சமின்றி தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

ஆய்வின் போது , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed