கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் மாநில கூட்டமைப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாநில கூட்டமைப்பு துணை தலைவர் ராஜி தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்னாள் மாநில தலைவர் ஜோதிமணி, மாநில கூட்டமைப்பு தலைவர் செல்வம், மாவட்ட துணை தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த உண்ணாவிரத போராடத்தின் வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேல்நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் மாதம் 250 ரூபாய்க்கு பணி செய்து வருகின்றனர், இதனால் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தமிழக அரசு கிராம ஊராட்சிகளில் ரூ.250 பணி புரிந்து வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு ஊதிய உயர்வினை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

மேலும், அதனை தொடர்ந்து பேசிய மாநில துணைத்தலைவர் பேசுகையில்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் பணிபுரியும் மேல்தேக்க குடிநீர் தொட்டி இயக்குனர்களுக்கு மாதம் ரூ.250- மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த 250 ரூபாயை வைத்து என்ன செய்வது ஆகையால் மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டி இயக்குனர்களுக்கு ஊதிய உயர்வினை உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

ஊதிய உயர்வை கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இனியாவது தமிழக அரசு ஊதிய உயர்வினை அறிவிக்கப்படவேண்டும், இல்லையேல் மிகப்பெரிய அளவில் அடுத்த கட்டமாக ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கோரி கண்டன
சேசங்களை எழுப்பினர்கள்.

தமிழக அரசை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநில பொறுப்பாளர் கோபால் மற்றும் பாலசுப்பிரமணி, பூபதி, கோபி உள்ளிட்ட பல்வேறு மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

செய்திகள் : மாருதி – மனோ /கிருஷ்ணகிரி எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed