திருவள்ளூர் மாவட்டம்,அண்ணாமலை சேரி கிராமத்தில்வெங்கடேஸ்வரா மெட்சிட்டி மருத்துவமனை,கடலோர பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மீனவ கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அண்ணாமலைச்சேரியில் இயங்கி வரும் கடலோர பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த இலவச பொது மருத்துவ முகாமில் பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவம்,எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம்,கண் மருத்துவம் மற்றும் தோல் மருத்துவம்,இரத்தத்தில் சர்க்கரை அளவு,இரத்த அழுத்தம் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டது. தொடர் சிகிச்சை பெற விரும்பவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

கடலோர பெண்கள் முன்னேற அறக்கட்டளை இயக்குனர் சரஸ்வதி மற்றும் பிற.எல்.எஃப் செயலாளர் சியாமளா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.

செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed