சேலம் கணேஷ் பொறியியல் கல்லூரியில் 15 வது ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமை வகித்தார். செயலாளர் விஜய கணேஷ், பொருளாளர் தா.செந்தில்குமார் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மாணவ மாணவிகளின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் விதமான தனி நடனம், குழு நடனம், பரதநாட்டியம், குறுநாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பல்கலைக்கழக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

செய்திகள் : தங்கதுரை / சேலம் எதிரொலி / 8939476777
