கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு வணிகவியல் ( பிஅன்| ) பிரிவில் பயிலும் மாணவி சாருபாலா அகில இந்திய பல்கலைக்கழக சதுரங்க போட்டிக்கு தேர்வு …
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற சதுரங்க போட்டியானது ஆந்திர பிரதேஷ் மாநிலம் கீதம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
போட்டியில் , தமிழ்நாடு பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பங்கு பெற்ற மகளிர் சதுரங்க அணியானது மூன்றாம் இடத்தை பெற்று அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பங்கேற்க இருக்கிறது.
அடுத்த மாதம் உத்திர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஐ ஐ எம் டி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கிறது.
வெற்றி பெற்ற மாணவி சாருபாலாவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் - செயலர் , முனைவர் பி. எல். சிவக்குமார் ஆகியோர் மாணவியை பாராட்டினர்.
மேலும், கல்லூரிக்கு சாதனை புரிந்த மாணவி சாருபாலாவை கல்லூரி துறை தலைவர் பெருமக்கள், பேராசிரிய பெருமக்கள், மாணவர் - மாணவியர்கள், பெற்றோர்கள், விளையாட்டு - சமூக ஆர்வலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி மகிழ்ந்த வண்ணமாய் உள்ளனர்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர் / எதிரொலி / 8939476777
