சேலம் நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா கல்லுரி வளாகத்தில் நடைபெற்றது,
இந்த விழாவிற்கு நாலெட்ஜ் கல்லூரி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கல்லூரியின் செயல் தலைவர் முனைவர் பி.எஸ்.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னையை சேர்ந்த காக்னிசன்ட் நிறுவனத்தின் மனிதவளத் துறையின் இணை இயக்குனர் ரோபியா ரோஸ், சேலம் கிளாசிக் குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தாளாளர் முனைவர் டி.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கும், 2025&2026 ஆம் கல்வியாண்டிற்கான சிறப்பு ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான விருதுகளை வழங்கி பாராட்டினர்.

நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.விசாகவேல் கல்லூரியின் ஆண்டு அறிக்கையும், மேலாண்மை துறை இயக்குனர் முனைவர் ஏ.ஸ்டீபன் மேலாண்மை துறையின் ஆண்டறிக்கையும் வாசித்தனர். மாணவ மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் ஜே.குமார், பொருளாளர் வி.சுரேஷ்குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள், இயக்குனர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் : தங்கதுரை / 9442979467 / சேலம் / எதிரொலி / 8939476777
