ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள  செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது :
  
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 இலட்சம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் புதிதாக கண்டறியப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. ஹெச்.பி.வி. வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் கருப்பைவாய் புற்றுநோயை ஹெச்.பி.வி தடுப்பூசி செலுத்துவதின் மூலம் 99.7% வரை 7 இத்தடுப்பூசி 156 நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. 

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 வயது நிரம்பிய 13,200 குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்தடுப்பூசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் , அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 28.02.2026 முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு அனைத்து நாட்களிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இம்முகாமிற்கு வரும் பயனாளிகள் ஆதார் அட்டை , கைபேசியினை கட்டாயமாக கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    
மேலும்,முன்பதிவு செய்து கொள்ள https:/uwin.mohfw.gov.in என்ற இணையதளத்தினை பயன்படுத்தி கொள்ளலாம்.
  
கருப்பைவாய் புற்றுநோயை தடுக்கும் பொருட்டு 14 வயது பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் சர்வதேச தர ஹெச்.பி.வி  தடுப்பூசியினை முற்றிலும் விலையில்லாமல் பெற்று பயன்பெறுமாறு ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8949476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed