புரட்சி பாரதம் கட்சியின் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சட்டமன்ற உரை விளக்க கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி ஒருங்கிணைப்பாளர் வினோத், மாவட்டச் செயலாளர்களான ஓசூர் தியாகராஜ், பர்கூர் புரட்சி சூர்யா, வேப்பனப்பள்ளி அருண்குமார், மாநகராட்சி மாவட்ட செயலாளர் மணிவண்ணன், தளி அருண்குமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் இளம் புரட்சியாளர் டாக்டர். பூவை ஜெகன்மூர்த்தி, கலந்துகொண்டு விளக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் சென்று கொண்டிருப்பதாகவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும், பெண்கள் தமிழகத்தில் சுதந்திரமாக வெளியே வர முடியவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் சட்டமன்றத்தில் தான் எழுப்பும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள் சரியான பதில் அளிப்பதில்லை எனவும், நான் கூறும் குற்றச்சாட்டை பொய் என கூறும் அமைச்சர்கள் அதற்கான ஆதாரத்துடன் சரியான விளக்கத்தை தருவதில்லை என கூறினார். திமுக ஆட்சி இன்னும் 20 நாட்களில் முடிந்துவிடும், மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தல் தேதிக்காக தமிழ முன்னதாக மாவட்ட அமைப்பாளர் அனுமந்தன் மாவட்ட இணைச் செயலாளர்களான வேப்பனப்பள்ளி வினோத்குமார், பர்கூர் அருணாச்சலம், கிருஷ்ணகிரி சத்யநாராயணன், ஓசூர் சிட்டி, தளி மணிகண்டன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். மாநில பொதுச் செயலாளர் ருசேந்திரக்குமார், தலைமை நிலைய செயலாளர் பூவைமுகிலன், மாநில பொருளாளர் தொழுவூர் மாறன், துணைத் தலைவர் ஏழுமலை, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மணி, மது, மாதேஷ், தளி கிருஷ்ணமூர்த்தி, வேப்பனப்பள்ளி துரைராஜ், லோகேஷ், நரசிம்மன், பெருமாள், சிவா, சூர்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாநில மாவட்ட, நகர, ஒன்றிய, கழக, நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஊடகப்பிரிவு ஹரிஹரன் நன்றியுரை ஆற்றினார்.

செய்திகள் : மாருதி – மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed