
வேலூர் மாவட்டம் nபேர்ணாம்பட்டு கள்ளிச்சேரி ராஜன் பிரதர்ஸ் அணியைச் சார்ந்த நரேஷ் பீகாரில் நடந்த52 ,வது ஜூனியர் தேசிய கபடி போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் விளையாடி வெண்கல பதக்கம் பெற்றார்.

அவருக்கு பேரணாம்பட்டில் வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி குழுவின் சார்பில் மாவட்ட தலைவர் பிரபாகரன் மாவட்ட செயலாளர் இராசி தலித் குமார் சேர்மன் சீவூர்எஸ்.ஏ. சேட்டு மாவட்ட பொருளாளர் பாஸ்கர் சீனியர் துணைத் தலைவர்சி.கே. வெங்கடேசன் துணைத் தலைவர்கள் சோழ பாண்டியன் மேகநாதன் தமிழ்நாடு கன்வினர் கோபாலன் நடுவர் சிவராமன் மற்றும் துணைச் செயலாளர்கள் சச்சின் சூர்யா சதீஷ் கண்ணன் திருமலைமற்றும் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கபடி வீரர்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

செய்திகள் : மூர்த்தி / எதிரொலி
