கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரம் பூதாமூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி லதா என்பவர் கடந்த 4 ம் தேதி அன்று தனது வீட்டிற்கு புதிய மின் இணைப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.
மனு அளித்து 20 நாட்களை கடந்தும் மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மாற்றுத்திறனாளி லதாவிடம் அரசு அதிகாரிகள் அலட்சிய போக்கோடு செயல்படுவதாகவும், ஊனத்தை குறிப்பிட்டு சொல்லி பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படுகிறது, இந்த நிலையில் மாற்றுத்திறனாளி லதா அவரது கணவர் விஜயகுமார் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் மின்வாரிய அலுவலகம் சென்று கேட்டபோது, அப்போதும் அவர்களை அலட்சியத்தோடு தரக்குறைவாக பேசியதாக கூறி மின்வாரிய அலுவலகத்தின் முன்பு குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இது போன்ற சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் மின் இணைப்பு பிரச்சனை என்று புகார்கள் அனுப்பினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிடம் புகார் மனு கொடுத்து மிரட்டி வருவதாகவும் குற்றங்கள் எழுந்துள்ளது.

விருத்தாசலம் செயற்பொறியாளர் அப்பகுதியில் அவருக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை கண்டு கொள்ளாமல் போவதனால். இது போன்ற சம்பவங்கள் நடந்து பொதுமக்கள் மன உலைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாற்றத்திறனாளிகளை இழுத்து அடித்து வாய்க்கு தகாத வார்த்தையால் திட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் இது போன்ற பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பாக, கோரிக்கை வைத்துள்ளனர்…
எதிரொலி / 8939476777
