திருநகர் பகுதியில், பாதாள சாக்கடைக்காக தொண்டப்பட்டு வரக்கூடிய பள்ளங்களை முறையாக சமப்படுத்தாமல் பாதியிலே விட்டு செல்லுவதாலும், இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய நிலையில் குடிநீர் குழாய் சேதமடைந்து, குடிநீர் ஆங்காங்கே சாலையில் தேங்கி நிற்பதால் மக்கள் அதிக அளவில் அவதிபடுகின்றனர்.

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94 வது வார்டான திருநகர் பகுதியான ஜோசப் நகர், தணிகை நகர், சீனிவாச நகர். மகாலட்சுமி நெசவாளர் காலனியில்கடந்த சில வாரங்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர. அதே சமயம் பாதாள சாக்கடை அமைப்பதற்காக ரோட்டின் மைய பகுதி மற்றும் ரோட்டின் பக்கவாட்டின் இருபுறமும் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு அதில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கழிவு நீர் செல்லக்கூடிய இடங்களான ரோடு, வீதி, தெருக்களின் மைய பகுதிகளில் சிமிண்டிலான உறை தொட்டிகள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. குழாங்கள் மற்றும் உறை தொட்டிகள் அமைப்பதற்காக தோண்டக்கூடிய பள்ளங்களை முறையாக சமப்படுத்தமால் விட்டு விடுகின்றனர். அதனால், ஏற்படுத்தப்படும் மேடு, பள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிபடுகின்றனர்.
ஒரு இடத்தில் மண் குவிந்து மேடாகவும், மற்றொரு இடத்தில் பள்ளமாகவும் இருந்து வருகிறது.

ரோடு மற்றும் தெருக்களில் சிமிண்டிலான கழிவு நீர் செல்லக் கூடிய உறை தொட்டிகளை மட்டமாக பதிக்காமல் விட்டு வருகிறார்கள். இதனையொட்டி அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்று வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் தட்டு தடுமாறி கீழேவிழுந்து காயமுற்று ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவலநிலை இருந்து வருகிறது.

பாதாள சாக்கடை மையகுழாய், உறை பதிக்க இடங்களில் சிமிண்ட் பூசாத நிலையாக இருப்பதால், மழை காலங்களில் மண் கரைந்து சரிவு ஏற்படும் அவலம் இருந்து வருகிறது. குழாய் உடைந்து குடிநீர் வீண் ஆகும்
இந்த நிலையில் திருநகர் 3-வது பஸ்நிறுத்தம் அருகே உள்ள சண்முகம் தெரு = வெங்கடேஸ்வரா தெரு சந்திப்பு பகுதியில் நேற்று மாலையில் பாதாள சாக்கடை குழாய் அமைப்பதற்காக ஜே.பி.இயந்திரத்தை கொண்டு பள்ளங்கள் தோண்டப்பட்டது.

அதில், வைகை கூட்டுக் குடிநீர் குழாய் சேதமடைந்தது ரோடு, தெருக்களில்குடிநீர் பெருக்கெடுத்து வீணாகியது. சாலையில் குடிநீர் தேங்கியதாலும், குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தாலும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சென்று வருவதில் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆகவே இது குறித்து, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு பாதாள சாக்கடை அமைப்பதில் முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மதுரை செய்தியாளர் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed