விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்த 20 நபர்கள் வேன் மூலம் நான்கு நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்று விட்டு வேளாங்கண்ணியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிகாலையில் சென்று கொண்டிருந்த போது, நாகை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏ. மண்டபம் பகுதியில் உள்ள மேம்பலாம் ஏறும்போது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி உள்ளார்.

இதனால், வேன் சாலை நடுவே பக்கவாட்டில் பிரண்டு விபத்துக்குள்ளானது. அதில், வேனில் பயணம் செய்த மருதூர் கிராமத்தை சேர்ந்த பொன்முடி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரு பெண்மணிக்கு கால் எலும்பு உடைந்து உள்ளது, மேலும், வேனில் பயணம் செய்த 15 நபர்கள் லேசான காயத்துடன் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மூன்று பேர் அரசு காமராஜர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.


விபத்தில் உயிரிழந்த பொன்டமுடியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் விபத்தில் சாலை நடுவே கிடந்த வாகனத்தை கிரேன் மூலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் போலீசாரும் அப்புறப்படுத்தினர்.

எதிரொலி / 8939476777
