சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில், சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கே.ஏ. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் முருகமாறன் பங்கேற்று பேசினார்.

அவர் பேசும்போது 2021 ல் முத்துவேல் கருணாநிதி முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றார் 520 வாக்குறுதிகள் கொடுத்து, எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாத 420 முதலமைச்சர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி என பேசியது குறிப்பிடத்தக்கது. அதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், உடனே சுதாரித்துக் கொண்ட அவர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பேசினார்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed