மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து சோழவந்தான் அருகே திருவேடகத்தில் உள்ள வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா, ஜெயக்குமார் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், பேரூர் செயலாளர் முருகேசன், இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி, பேரூர் துணை செயலாளர் தியாகு, விருகை தருமர், துரைக்கண்ணன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவேடகம் ஊராட்சி செயலாளர் மணி என்ற பெரியசாமி வரவேற்புரை ஆற்றினார். இதில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கபாண்டி, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, அவை தலைவர் முனியாண்டி, பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், மன்னாடிமங்கலம் ராஜபாண்டி, கல்லாங்காடு ராமு, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரங்கநாதன், முல்லை சக்தி, வடகாடுபட்டி பிரபு, குருவித்துறை பாபு, மகளிர் அணி வனிதா, சாந்தி மாரிமுத்து, வழக்கறிஞர் காசிநாதன்,

பேரூர் நிர்வாகிகள் உமா மாரி வெல்டிங் மாரி ஜேசிபி சுரேஷ் வைகை ராஜா அப்பாச்சி கண்ணன் ஆறுமுகம் ஜெயபிரகாஷ் பத்தாவது வார்டு மணிகண்டன் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சக்திவேல் மற்றும் நாகராஜ் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் ராஜன் பேரூர் செயலாளர்கள் திரவியம் மதன்

பாஜக சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் மற்றும் முத்துப்பாண்டி முருகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிளைக் கழக பகுதிகளில் இருந்து சுமார் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் கேபிள் மணி நன்றி கூறினார்

மதுரை செய்தியாளர் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed