திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த இல்லத்தில் தைப்பூசம் நாளான இன்று சன்மார்க்க நீதி கொடி உயர்த்தப்பட்டது. கடலூர் மாவட்டம் வடலூரில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வரும் நிலையில், சின்னக்காவனத்தில் உள்ள சின்னம்மை இல்லத்தில் தைப்பூச பெருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது.

வள்ளலார் சிறு குழந்தையாக இருந்த போது, இங்கு தவழ்ந்து விளையாடியதை நினைவுகூறும் விதமாக சின்னம்மையாருக்கும், வள்ளலாருக்கும் சிலை நிறுவப்பட்டுள்ளது. சின்னக்காவனம் பகுதியில் சன்மார்க்க சத்திய ஞானசபை ஏற்படுத்தி கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் நாள்தோறும் 3 வேளைகளிலும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள அணையா ஜோதி அனைத்து நாட்களிலும் எரிந்து கொண்டிருக்கிறது. தைப்பூச திருநாளை முன்னிட்டு இங்கு நீதிக்கொடி ஏற்றப்பட்டு சன்மார்க அன்பர்கள் அகவல் பாராயணம் ஓதினர். இதனையடுத்து பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பொன்னேரி செய்தியாளர் : மகேஷ்
எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *