திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம் 49-வது வார்டுக்கு உட்பட்ட பங்களாப்பா நகர் முதல் தெருவில் “தூர்வாரப்படாத சாக்கடையால்” நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தனிநபர் வீட்டின் மொட்டை மாடியில், சிரட்டையில், பழைய டயரில், பாத் ரூமில், பிரிட்ஜ்யில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என ஆய்வு செய்யும் அதிகாரிகள், வீட்டிற்கு சொதனை செய்ய கூட்டம் கூட்டமாக ஆட்களை அனுப்பும் நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் “மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில்” உள்ள கொசு உற்பத்தி மையத்தை” கண்டு கொள்வதில்லையே? மேலப்பாளையம் மக்கள் சிக்கன் குன்யா உள்ளிட்ட விஷக்காச்சல்கள் பரவுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இந்த சாக்கடைக்கு மூடி போட்டு கொசு உற்பத்தியாவததை தடுக்கவும், பொது மக்களை நோயில் இருந்து காக்கவும் நெல்லை மாநகரம் மேலப்பாளையம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நெல்லை செய்தியாளர் / செ.பா.தவசிகனி / 8939476777
