திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 77 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, பொன்னேரி கிரிமினல் பார் அசோசியேஷன் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
புதிதாக துவங்கப்பட்ட இந்த வழக்கறிஞர் சங்கத்தின் கௌரவ தலைவர் மகேந்திர ராஜ், ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டி.காந்தி ஆகியோர் முன்னிலையில், சங்க தலைவர் வழக்கறிஞர் பெரவள்ளூர் செ.ராஜா தலைமையில் செயலாளர் வழக்கறிஞர் விஜய், பொருளாளர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு உள்ளிட்ட அச்சங்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.

மேலும், சங்க துணைத் தலைவர்கள் சக்கரபாணி, சைமன், துணை செயலாளர்கள் கார்த்திக், ஆர்மி வெற்றி, பிரகாஷ், பிரபு, இணை செயலாளர்கள் சூர்யா, முத்துராமன், சீனியுவராஜ், சுரேஷ், சுரேஷ் விளையாட்டு துறை செயலர்கள் திருகுமரன், ஞானசேகரன், கௌதம், நூலகர்கள் விக்னேஷ், கந்தவேல், லெனின் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : பழவை, முத்து
