மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே சாலையில் நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து வேகமாக வந்து மோதியதால் விபத்து. அதில், மூன்று பேர் பலி 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம், கொட்டாம்பட்டி அருகே, பள்ளப்பட்டி நெடுஞ்சாலையில், டீ குடிப்பதற்காக நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் மீது, அதே சாலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி வேகமாக வந்த மற்றொரு ஆம்னி பேருந்து அங்கு நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது அத்தி பயங்கரமாக பின்பகுதியில் மோதியது.

அதில், வேகமாக வந்து மோதிய பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள சாலைக்கு சென்று அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மதுரை மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மேலூர் டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இறந்தவர்கள் பெயர் மனோரஞ்சிதம் (56) மற்றொரு பெண் திவ்யா மற்றும் சுதர்சன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

மதுரை செய்தியாளர் : காளமேகம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed