
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை இரண்டாவது மாவட்ட மாநாடு திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் எஸ். அபிராமன் தலைமை தாங்கினார், மாநில குழு உறுப்பினர் எம். ஜெயபாலன் கொடியேற்றி வைத்தார், மாவட்ட செயலாளர் பி. நாகராஜன் அறிக்கை வாசித்தார், மாநில துணைத்தலைவர் கே. இளங்கோ துவக்க உரையாற்றினார், மாநில துணைத்தலைவர் ஆர். ராமமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டி. ஹரிபரந்தாமன் கருத்துரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் எஸ் .சிவக்குமார் நிறைவுறையாற்றினார்.
மாநாட்டு தீர்மானங்கள்:
- தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக மனித உரிமை நீதிமன்றங்களை தனியாக அமைத்திட வேண்டும்,
- திருவண்ணாமலை பகுதியில் அரசு சட்டக் கல்லூரி துவங்கிட வேண்டும்,
- கட்டாய ஈ பைலிங் முறையை கைவிட வேண்டும்,
- தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் காலிப்பணியிடங்களை விரைவாக நிறைபிட வேண்டும்.
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர் எம். ஜெயபாலன், செயல் தலைவராக எஸ். அபிராமன், மாவட்ட செயலாளர் பி. நாகராஜன், பொருளாளராக கீர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
செய்தியாளர் : கண்ணன் திருவண்ணாமலை
