திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து காமாட்சியம்மன் தரிசித்தனர்.


சக்தி பீட ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும், உலகப் புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாத வெள்ளி கிழமையை ஒட்டி, தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பச்சை சிவப்பு பட்டு உடுத்தி வைர கிரீடம், அணிந்து, மல்லிகைப்பூ, சம்பங்கி பூ, சாமந்திபூ கண்ணாடி வளையல் மாலைகள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுக்கும் பட்டுடுத்தி, மடிசாரா அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க வைர வைடூரியங்களால் ஜொலித்து, தங்க தேரில் எழுந்தருடைய காமாட்சியம்மன் மனம் உருகி வழிபட்ட பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்ல காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உலா வந்தார்.

இந்த உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed