திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் சென்னை கிருஸ்தவ கல்லூரியில் இயங்கி வரும் ரீஃப் அமைப்பு சார்பில் பழவேற்காட்டில் உள்ள மாணவர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு கடல் ஆமைகள் கூடு கட்டும் பருவத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்சியானது தக்க விரிவுரையாளர்கள் கொண்டு அளிக்கப்பட்டது.

கடல் ஆமை பாதுகாப்பு நிறுவனம் (ISC) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கடல் ஆமையின் வாழ்க்கை குறித்த தெய்வீக வாதம், கடல் ஆமை செயல் திட்டம் (பாதுகாப்பு, பாதுகாப்பு, தடுப்புச் சட்டம், சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள்.) குறித்த வினாடி வினா, “நமது கடல் ஆமைகளை காப்பாற்றுங்கள் என்ற கருப்பொருள் அடங்கிய சுவரொட்டி தயாரிப்பு, பங்கேற்பாடுகளுடன் குழு புகைப்படம் எடுத்தல், கடற்கரையில் கண்டறிவதற்கான நடைப்பயணம் உள்ளிட்டவை நிகழ்ச்சியில் முக்கிய அம்சங்கள் ஆகும்.

ரிப் அமைப்பு நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சிவனேசன் முதன்மை இயக்குனர் ரங்கநாதன்,ரீஃப் அமைப்பு செயலர் மற்றும் திட்ட இயக்குனர் ராமச்சந்திர பிரபு, முதன்மை ஆராய்ச்சி அலுவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மோகன்தாஸ், பொருளாளர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத், திட்ட அலுவலர் ஜான் மோசஸ், கொள்கை மற்றும் ஆளுமை தலைவர் மோனிகா ஆகியோரின் நிகழ்ச்சி உறுதுணையில்
கடல் ஆமை பாதுகாப்பு நிறுவன
இயக்குனர் சென்னை கிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்பநிலை துறை திட்ட அலுவலர் முத்துக்குமார், டைவ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் அரவிந்த் தருண்ஸ்ரீ, சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் அரசு குழு உறுப்பினர் மற்றும் திட்ட மேலாளர் சாமுவேல் சுகுமார், சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் விலங்கியல் துறை உதவி பேராசிரியர் லோகமான்ய திலக், வனவிலங்கு ஆலோசகர் மற்றும் தமிழ்நாடு கால்நடை துறை அலுவலர் ஜெயகிருஷ்ணன், காரப்பாக்கம் ஃபோர்ஸ் திட்ட இயக்குனர் ஆமை ஆராய்ச்சி விஞ்ஞானி மது மகேஷ், பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன்வள மேலாண்மை துறை உதவி பேராசிரியர்கள் சுதன், மௌலிதரன், காஞ்சிபுரம் பச்சையப்பா கல்லூரியின் விலங்கியல் துறை உதவி பேராசிரியர் மற்றும் ரிப் தலைவர் சிற்றரசு, பழவேற்காடு பகுதியின் சமூக ஆர்வலர் மகேந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக
சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் அரசு குழு உறுப்பினர் மற்றும் திட்ட மேலாளர் சாமுவேல் சுகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் துறை உதவி பேராசிரியர்லோகமான்ய திலக்குக்கு பழவேற்காடு பகுதிக்கு சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கான விருதும், பழவேற்காட்டில் மாற்றத்தை உருவாக்குபவர் விருது சமூக ஆர்வலர் முத்துவுக்கும், சுற்றுச்சூழலுக்கான இளம் சாம்பியன் விருது டைவ் ஃபோர்ஸ் வீராங்கனை
தாரகை ஆராதனாவுக்கும்,
சுற்றுச்சூழலுக்கான இளம் ஆராய்ச்சியாளர் விருது மகிமை ஜான் ஜோஸ் சுற்றுச்சூழலுக்கான தலைமைத்துவ விருது
புவனேஸ்வரி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

சிறப்பு செய்தியாளர் : பழவை முத்து / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed