திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் என்எல்சி இந்தியா லிமிடெட் 70ஆம் ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் தாமோதரன்,
அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழகப் பாண்டியன், பிரேம்குமார், முகமது சுபேர், சிவக்குமார் மற்றும் விப்ரா ஸ்ரீ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிறுவனர் நாசர் என்எல்சி இந்தியா லிமிடெட் 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, அதன் 70-வது துவக்க நாளை கொண்டாடும் விதமாக வெளியிட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்து பேசுகையில், 20 மே 2026 அன்று கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் வைத்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. உறையின் மேல் பகுதியில் நெய்வேலியின் பிரம்மாண்டமான நிலக்கரி சுரங்க அகழ்வாராய்ச்சிப் பணிகள் மற்றும் ராட்சத இயந்திரங்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

என்எல்சி-யின் அனல் மின் நிலையங்களின் புகைபோக்கிகள் மற்றும் குளிரூட்டும் கோபுரங்கள் காட்டப்பட்டுள்ளன.பசுமை ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல் ஆற்றலுக்கு முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், காற்றாலைகள் மற்றும் நெய்வேலி நகரத்தின் பசுமையான நீர்நிலைகள், மரங்கள் சூழ்ந்த பகுதிகள் அழகிய அறுகோண வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. உறையின் மேல் பகுதியில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வைக் குறிக்கும் ஹெல்மெட் அணிந்த ஒரு சிங்கக் குட்டியின் கார்ட்டூன் சின்னம் உள்ளது. உறையின் வலது பகுதியில் ₹5 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டப்பட்டுள்ளது.

சிறப்பு ரத்து முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இதில் “70th Raising Day” மற்றும் “நெய்வேலி Neyveli 607801” என்று தேதியுடன் அச்சிடப்பட்டுள்ளது.
இடப்பக்கத்தில் “Creating Wealth for Wellbeing” (வளத்தை உருவாக்கி நல்வாழ்வு அளிப்போம்) என்ற என்எல்சி நிறுவனத்தின் தாரக மந்திரம் அச்சிடப்பட்டுள்ளது என்றார்.

செய்திகள் ; விஜயகுமார் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed