வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றிய கிராம ஊராட்சிகள் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக மீனா பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்ற பிறகு அவர் கூறியது பேரணாம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி உடனுக்குடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நலதிட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய விரைந்து செயல்படுவேன் என உறுதி அளித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பேரணாம்பட்டு ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய மீனா தற்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பதவி உயர்வு பெற்று இங்கு பணியாற்ற உள்ளார், புதிய பொறுப்பேற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா அவர்களுக்கு அரசியல், பிரமுகர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட பல முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
வேலூர் செய்தியாளர் மூர்த்தி ; எதிரொலி / 8939476777
