கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பொ.தர்மராஜ் தலைமையில் வட்டாட்சியர் பெ.தா.ரமேஷ் முன்னிலையில் 1435 ஆம் ஆண்டு பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழாவில் அகசிபள்ளி, பெத்ததாளப்பள்ளி, கட்டிகானபள்ளி, பயனப்பள்ளி, கம்பம்பள்ளி, காட்டிநாயனபள்ளி, கோதிகுட்டலபள்ளி உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ், பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா, மற்றும் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா ரத்து, ஆக்கிரமிப்பு அகற்றல், நில அபகரிப்பு, புதிய குடும்ப அட்டை, கிராம கணக்கில் மாற்றம், ஆகியவை தொடர்பான 978 மனுக்கள் பெறப்பட்டது.
இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உடனடி ஆணைகளை மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவி பொ.தர்மராஜ் வழங்கினார். இதர துறைகள் சார்ந்த மனுக்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கணேசன், மண்டல துணை வட்டாட்சியர்கள் கிருஷ்ணகிரி மகேஸ்வரி, வேப்பனப்பள்ளி சகாதேவன், காவேரிப்பட்டினம் ஜெயபால், மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக வழங்கினார்கள்.
நிறைவு நாளான இன்று பொதுமக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் தகுதியின் அடிப்படையில் கிடைத்திட வழிவகை உடனடியாக செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தர்மராஜ் அவர்கள் உத்தரவிட்டார்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
