திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலாடு அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் 3வது மஹா ருத்ரா பூஜை எனப்படும் ருத்ரயாகம் நடைபெற்றது.

சித்ரா பவுர்ணமி அன்று தொடங்கிய முதல் யாக பூஜை மூன்றாம் பவுர்ணமியான ஆனி பவுர்ணமியன்று ஆலாடு ஊராட்சி,வெள்ளக்குளம் பொழுது விடிந்தான் மேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நீலாயுதாக்க்ஷி சமேத ஸ்வேதபுரி சர்வேதஸ்வரர் ஆலயத்தில் இருந்து பூஜைகள் செய்து சீர்வரிசை பொருட்களை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வாகனங்களில் ஊர்வலமாக யாக குண்டத்திற்கு வந்தனர்.

பின் யாக குண்டம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாக கலசங்களுக்கும்,வேதபுரீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் உடன் யாக பூஜைகள் நடைபெற்றது. யாக சாலையில் ஹோமங்கள், வேள்விகளுடன் ருத்ரா யாகம் நடைபெற்றது.

ஸ்ரீலஸ்ரீ சாக்த மஹாகுரு,வாழும் சித்தர், டாக்டர் ஸ்ரீம் மகேஷ்குமார் சுவாமிகள் முன்னிலையில் பூர்ணாஹூதி நடைபெற்று பக்தர்கள் யாக குண்டத்தில் பொறிஅவல் போட்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர் நந்தகுமார்,தியாகராஜன், சுகுமார்,மனோகர்,எஸ்.சுமன்,சரவணன்,செந்தில், மணிகண்டன், பாபு,ஜெயராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

பொன்னேரி பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; பழவை முத்து எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed