மூத்த பத்திரிக்கையாளரும், தமிழ்நாடு பத்திரிகை சங்கத்தின் முன்னாள் தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களோடு இணைந்து பணியாற்றியவருமான பி.எஸ்.டி.புருஷோதமன் அவர்கள் உடல்நல குறைபாட்டால் இயற்கை எய்தினார்.

அவருடைய மறைவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், அகில இந்திய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் வே. ராஜசேகரன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம் உள்ளிட்ட அரசியல், தொழிற்சங்க மற்றும் பத்திரிகைத் துறை முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, மறைந்த தோழரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.


தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ், மாநில செய்தி தொடர்பாளர் பா. பார்த்திபன் ஆகியோரும் மலர் அஞ்சலி செலுத்தினர் !

மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் அவர்களின் பத்திரிகைத் துறைக்கும், தொழிலாளர் இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கும் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பணிகள் என்றும் நினைவுகூரத்தக்கவை என அஞ்சலி செலுத்திய அனைவரும் புகழாரம் சூட்டினர்.

செய்திகள் ; லெனின் லோகேஷ் எதிரொலி / 8939476777
