புதுச்சேரி, காரைக்கால் ஸ்ரீ கவிலாசநாத சுவாமி - ஸ்ரீ நித்ய கல்யாணம் பெருமாள் வகையறா தேவஸ்தானத்திற்குட்பட்ட காரைக்கால் அம்மையார் திருக்கோவில் உலகப் புகழ் பெற்றதாகும்.
சனீஸ்வரன் கோவில் அமைந்துள்ள திருநள்ளாறு ஸ்தலத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனைவரும் அருகில் உள்ள காரைக்கால் அம்மையார் திருத்தலத்திற்கும் வந்து வணங்கிச் செல்வது அன்றாட நிகழ்வாக இருக்கும். இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மாங்கனித் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான மாங்கனித் திருவிழாவையொட்டி, கடந்த 27-ந் தேதி சனிக்கிழமை . மாலை . மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வு நடைபெற்றது.

28 – ந் தேதி . ஞாயிறு . காலை . காரைக்கால் அம்மையார் – பரமதத்த செட்டியார் திருக்கல்யாணம் வேத மந்திரங்கள் முழங்க சிறப்புற நடைபெற்றது. திருக்கல்யாணத்தைக் காண காரைக்கால் உள்பட புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என பக்தர்கள் பெருந்திரளாக திரண்டு வந்து சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.

மாலை ஸ்ரீபிக்ஷாடணமூர்த்தி வெள்ளைச் சாற்றி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் சிகரமாக, 29-ந் தேதி . திங்கள். அதிகாலை பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை . ஸ்ரீ பிக்ஷாடணமூர்த்தி காரைக்கால் நகரில் வீதியுலா வந்தபோது வீதிகளில் இருபுறமும் கூடியிருந்த பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் , வணிக நிறுவனங்கள் , இல்லங்களின் மாடிகளில் குவிந்திருந்த இருந்த பக்தர்களும் மாங்கனிகளை வீசி தங்களது வேண்டுதலை வேண்டி சுவாமி தரிசனம் செய்தனர்.

மாங்கனி இரைத்தல் திருவிழாவை காண காரைக்கால் உள்பட புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், புதுச்சேரி மாநிலம் , காரைக்கால் முக்கிய பிரமுகர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். மாலை. அமுது படையல் நடைபெற்றது .
30 – ந் தேதி . செவ்வாய் . அதிகாலை காட்சி கொடுத்தல் நிகழ்வும் நடைபெறுகிறது.

உலகப்புகழ் பெற்ற திருவிழாவையொட்டி, கோவில் வளாகம் உள்பட நகர் முழுவதும் பலவர்ண மின் விளக்குகள், டியூப் லைட், போக்கஸ் லைட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி ஆலோசனையின் பேரில், புதுவை இ.ச.தி. ஆணையர் இரா. குமரன் , கோவில்கள் நிர்வாக அதிகாரி ஆர். சுப்பிரமணியன் , ஆலய நிர்வாக அதிகாரி சி. விநாயகமூர்த்தி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர் / எதிரொலி / 8939476777
