மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு, நெடுவை புல்லட் குரூப்ஸ், மதயானை கூட்டம், சோழவந்தான் வாசு நாகராஜ் படைத்தளம், பிரவீன் சதீஷ் நட்பு சாம்ராஜ்யம் மற்றும் கிராம இளைஞர்கள் சார்பாக, கிடா முட்டு போட்டி நடைபெற்றது.


ஒரு போட்டிக்கு 60 முட்டுக்களாக நடைபெற்ற கிடா முட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான கிடாய்கள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற கிடாய்க்கு ஆறு கிலோ பித்தளை அண்டா, சரி ஜோடிக்கு மூன்று கிலோ பித்தளை அண்டா, பரிசுகள் வழங்கப்பட்டது.


போட்டியானது, உச்ச நீதிமன்றம் மற்றும் காவல்துறை வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. கிடா முட்டு போட்டியின் போது கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. கால்நடை துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம்களும் சோழவந்தான் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு முன்னேற்பாடு ஏற்பாடுகளும் சோழவந்தான் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

போட்டியில் நெடுங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கிடா முட்டு போட்டியினை கண்டு ரசித்தனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
