மதுரை சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பழங்காநத்தம் ரவுண்டானா அருகே திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி ஆகியோரின் தலைமையில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரமானது நடைபெற்றது.


அதில், போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இதனால் குடும்பங்கள் எவ்வாறு சீரழிகிறது மேலும் போதைப் பழக்கத்தில் உள்ளவர் அடிமையாய் உள்ளவர்களை எவ்வாறு மீட்பது குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் யாரேனும் பகுதியில் விற்பனை செய்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
