கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட முழுவதும் தவெக கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி தவெக நிர்வாகி ஏஜாஸ் ஏற்பாட்டில் கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ வினாயகர் திருக்கோவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் நலமுடன் வாழவேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து டான்சி வளாகத்தில் பந்தல் அமைந்து மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த அன்னதானம் வழங்கும் விழாவில் செயற்குழு உறுப்பினர் பயாஸ் பாஷா, மற்றும் தவெக நிர் வாகிகளான வேலன், சரவணன், ஹேம்நாத்குமார், கிருஷ்ணன், சதாம் , ஆசீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed