கன்னியாகுமரி மாவட்டம், செம்மான் விளை JBVV அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் சேவா ரத்னா முனைவர் கொ.விஜி குமார் பொதுமக்கள் சார்பில், தமிழ் நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ஆதி காலத்தில் நமது பாரத தேசத்தில் கடவுளுக்கு அடுத்தப் படியாக மருத்துவர்கள் மனித உறவுகளின் உயிர்களின் பாதுகாக்கும் உன்னத சமூக சேவையை செய்து வந்தனர்.அவர்கள் கற்ற கல்வியை சமூக சேவைகள் செய்வதற்கு பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், இப்போது உள்ள காலத்தில் மருத்துவர்கள் தான் கற்ற மருத்துவ கல்வியை வியாபாரமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆம்! இன்றைய அரசு மருத்துவர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவ மனையில் பணி புரிந்தாலும் தனியாக ஒரு மருத்துவ சிகிச்சை மையத்தை அமைத்து பணம் சம்பாதிக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.
இத்தகைய மருத்துவர்கள் இதுபோல பணம் சம்பாதிக்கும் தொழில் ஈடுபடும் போது அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இருப்பதில்லை. இதன் காரணமாக அரசு மருத்துவ மனைகளில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பயிற்சி செவிலியர்கள் மருத்துவம் செய்யும் அவலநிலை ஏற்படுகின்றது.

ஆகவே, இத்தகைய தொழில்களை செய்கின்ற அரசு மருத்துவர்களை உடனடியாக வேலையில் இருந்து அகற்றியும் மற்றும் அவர்கள் தனியாக ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை மையங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777
