தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாடும் வகையில், தீ விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் “தீ விபத்தில்லா தீபாவளி” விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் விழா தமிழ்நாடு தீ தடுப்பு மீட்பு பணி மைய திருச்சி மாவட்ட வளாகத்தில் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட தீயணைப்பு மீட்பு . பணி மைய உதவி மாவட்ட அலுவலர் லியோ ஜோசப் ஆரோக்கியராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொதுநல சேவையாளர் சீனிவாச பிரசாத் மேற்கொள்ளும் ‌ விழிப்புணர்வு துண்டு பிரசுர பிரச்சாரத்தை துவங்கி வைத்தார். தேசிய விருதாளர் திரைப்பட நடிகர் மாற்றம் அமைப்பு நிறுவனத் தலைவர் தாமஸ், சாய் பாலாஜி, ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்க தலைவர் மோகன்ராம் ,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

தீபாவளி என்பது இருளை நீக்கி ஒளியைப் பரப்பும் மகிழ்ச்சித் திருநாள். இத்திருநாளில் பட்டாசுகளை வெடிப்பது மகிழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தாலும், சிறிய கவனக்குறைவுகூட தீக்காயங்கள், தீ விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கலாம். எனவே, பட்டாசுகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.
திறந்தவெளியில், மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து இல்லாத பாதுகாப்பான இடத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
குழந்தைகள் பெரியவர்களின் நேரடிக் கண்காணிப்பில் மட்டுமே பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டும். பட்டாசுகளைப் பற்றவைக்கும்போது நீண்ட குச்சி அல்லது நீளமான தீப்பற்றும் கருவியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.
பாதுகாப்பான இறுக்கமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். நைலான், பாலியஸ்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்.பாதுகாப்பு ஏற்பாடுகளாக பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒரு வாளி தண்ணீர், மணல் மற்றும் முதலுதவிப் பொருட்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

கவனக்குறைவாக வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் பற்றவைக்க முயற்சி செய்யக்கூடாது. பட்டாசுகளைப் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக் கூடாது. எரியும் பட்டாசுகளைக் கையில் வைத்துக்கொண்டு வெடிக்கக் கூடாது.
சுற்றுச்சூழலையும் உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்த்து, குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் செல்லப்பிராணிகளின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒலி மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பொறுப்புடன் கொண்டாட வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான 101 அல்லது ஒருங்கிணைந்த அவசர உதவி எண் 112-ஐத் தொடர்புகொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், சந்தைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்குவதன் மூலம் தீ விபத்துகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க சமூக செயற்பாட்டாளர்கள் செயல்பட்டனர்.இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களிடம் பாதுகாப்பு உணர்வை வளர்ப்பதுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பொறுப்புடன் தீபாவளியைக் கொண்டாட உதவும். அரசுத் துறைகள், சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படும்போது விழிப்புணர்வு முயற்சிகள் மேலும் பயனுள்ளதாக அமையும்.
தீபாவளியின் உண்மையான மகிழ்ச்சி பட்டாசுகளின் சத்தத்தில் மட்டுமல்ல; பாதுகாப்பாகவும் அன்புடனும் அனைவரும் இணைந்து கொண்டாடுவதில்தான் உள்ளது.

ஒரு சிறிய விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரம் கூட ஒரு குடும்பத்தைத் தீ விபத்திலிருந்து காப்பாற்ற உதவலாம்.
எனவே, “தீ விபத்தில்லா தீபாவளி – பாதுகாப்பான தீபாவளி – மகிழ்ச்சியான தீபாவளி” என்ற உயரிய நோக்கத்துடன் பா தீபாவளியைக் கொண்டாடுவோம் என்றனர்.திருச்சி மாவட்ட மீட்பு பணி நிலைய அலுவலர் போக்குவரத்து சரவணன் தீயணைப்போர் ஓட்டி சார்ஜின் பாலசுப்பிரமணியன் மகேஸ்வரன் பழனியப்பன் தீயணைப்பு சிவராமன் முத்துப்பாண்டி பாலமுருகன் நாகூர் பிச்சை சந்திரசேகர் ராஜேஷ் சிவகுருநாதன் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

செய்திகள் : விஜயகுமார் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed