வத்திராயிருப்பு, மகாராஜபுரம் ரங்காராவ் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வத்திராயிருப்பு இலவச சட்ட உதவி மையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்காக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் விஜயகுமார் தலைமை வகித்தார் தலைவர் சுந்தராஜப் பெருமாள் பள்ளிப் பொருளாளர் பால்சாமி முன்னிலை வகித்தனர். முதல்வர் சீனிவாசகம் வரவேற்புரை ஆற்றினார். வத்திராயிருப்பு இலவச சட்ட உதவி மையம் வழக்கறிஞர் கதிரேசன் குழந்தை திருமண தடுப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு தரும் சட்டங்களை பற்றி எடுத்துரைத்தார்.
வழக்கறிஞர் முத்துக்கனி மாணவிகளுக்கான பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்டங்களை பற்றி விரிவாக விளக்கிக் கூறினார். வழக்கறிஞர் லிங்கம் மாணவர்களிடையே நிலவும் போதை கலாச்சாரம் மற்றும் தடுப்பு பற்றி அதற்கான சட்ட விதிமுறைகள் பற்றி மாணவர்களிடம் விளக்கிக் கூறினார்.
ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். துணை முதல்வர் கல்யாண சுந்தரம் நன்றியுரை ஆற்றினார்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
