காஞ்சிபுரம் மாவட்டம் B2 விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் காவல் ஆய்வாளர் சங்கர சுப்ரமணியன் அவர்கள் தலைமையில், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏகாம்பரம் அவர்கள் கொடி அசைத்து வைக்க சிறப்பு பேரணி நடைபெற்றது.

பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள், “போதைப்பொருளை ஒழிப்போம் – போதை இல்லா சமூகத்தை உருவாக்குவோம்”, “போதையின் வழிச்சென்றால் வாழ்க்கை அழியும்”, “போதைப்பொருள் பயன்பாட்டால் குடும்பமும் சமூகமும் பாதிக்கப்படும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு, போதைப்பொருளின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துரைத்தனர்.

போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதோடு, சமூகத்தில் பல்வேறு குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கிறது என்பதால், அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும், போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு குறித்த தகவல்கள் கிடைத்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து, போதை இல்லாத காஞ்சிபுரத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed