வலையொளி வாயிலாக நாள்தோறும் ஒரு திருக்குறளையும், அதற்கான விளக்கத்தையும், பதிவு செய்து வரும் திருமதி. உமா ராஜா அவர்கள், ஆயிரமாவது திருக்குறளை 11.06.2026 அன்று, நிறைவு செய்ததன் பொருட்டு கிருஷ்ணகிரி அன்பு குளோபல் ஃபேமிலியின் சார்பாக அவருக்கு பாராட்டு விழா இனிதே நடைபெற்றது.

அன்னாரது விடாமுயற்சியையும் தமிழை இணைய வாயிலாக பரப்பும் பொருட்டு எடுத்து கொண்ட முயற்சிக்காகவும் திருமதி. உஷா அன்பு மற்றும் குளோபல் பேமிலி நண்பர்கள் பலர் பாராட்டினார்கள்.
விழாவில் அன்பு குளோபல் ஃபேமிலியின் உறுப்பினர்களான சக்தி, அல்லியம்மாள், சரவணன், கவிதா ஷபீர், கண்ணன் மகேந்திரவர்மா, நரசிம்மன், கார்த்திகேயன், மணிகண்டன், அருணா, பிரியா ரோகிணி, ஜெயந்தி மற்றும் மாருதி மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருமதி. உஷா அன்பு செய்திருந்தார்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
