தனியாக சென்ற நபரிடம் செல்போனை பிடுங்கி தப்பித்துச் சென்ற நிலையில் ரோந்து சென்ற காவல் படையினர் கைது செய்து சிறையில் அடைப்பு.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள ஆசான புதூர் கிராமத்தில் விவசாயியான கோபி என்பவர் இரவு விவசாயப் பணிகளை மேற்கொண்டு இருக்கும்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பொன்னேரி லட்சுமிபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த விஷால்(21) த/பெ கிருஷ்ணன் மற்றும் தேவராஞ்சேரி,லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூவரசன் (23) த/பெ குமார் ஆகியோர் விவசாயி கோபியிடம் பேச்சுக் கொடுத்து செல்போனை கேட்டுள்ளனர். உடனே, சுதாகரித்துக் கொண்ட விவசாயி கோபி செல்போனை தர மறுக்கவே அவரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக அவசரப் போலீஸ் 100க்கு போன் செய்துள்ளனர். அதன் மூலம் இரவு காவல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன்,தலைமை காவலர் ராஜசேகரன்,முதல் நிலை காவலர் நாகப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் உடனடியாக கோபியிடம் விசாரித்து அங்கிருந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதில் சந்தேகத்துக்கிடமான இருவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட விஷால் மற்றும் பூவரசன் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
