தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் வாரச்சந்தையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட துறையின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, ராமநாதபுரம் வாரச்சந்தையில் வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம் கடை வியாபாரிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி 100 % சதவீதம் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு , உதவி திட்ட அலுவலர் ராஜா முகம்மது , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777

