கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் டாக்டர் செல்வகுமார் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். இதனையடுத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கிருஷ்ணகிரி ஸ்ரீ செல்வ வினாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். இதனைத் தெடர்ந்து கிருஷ்ணகிரி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட போத்தாபுரத்தில் இருந்து தனது பரப்புரை மூலம் கை சின்னத்திற்கு வாக்குசேகரிக்க வந்த வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார் அவர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பினைக் கொடுத்தனர்.

பின்னர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார், காங்கிரஸ் கட்சியின் காலத்தில் கோடான கோடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய நூறு நாள் திட்டத்தினை சிதைக்கு மேடியின் மத்திய அரசுக்கும் அதற்கு துணை போகும் அடிமை அதிமுக கட்சிக்கும் இந்த தேர்தலில் தக்கப்பாடம் புகட்டி மீண்டும் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி அமைய நீங்கள் கை சின்னத்திற்கு அதரவுத்தருமாறு கேட்டுக் கொண்டார்,

உடன், ஒன்றிய திமுக செயலாளர் தேங்காய் சுப்பிரமணியன், நகர செயலாளர் பாபு, பேருராட்சி தலைவர் செந்திகுமார், மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு,மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, முன்னாள் அதில இந்தியா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரைசாமி, முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் முபாரக், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டத் தலைவர் தமிழ்மணி, மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் விக்னேஷ் பாபு, மாவட்ட கலைப்பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, சேவாதள மாவட்டத்தலைவர் தேவராஜன், வட்டாரத் தலைவர் செல்வமணி, சென்னப்பன், சக்திவேல் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed