தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் தனித் தொகுதி மதுரை மாவட்டம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது இதற்கு காரணம் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் மூர்த்தி திமுக தலைமையிடம் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில் சோழவந்தான் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள வெங்கடேசன் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தொடர்ந்து கடந்த சில தினங்களாக தான் பங்கேற்கும் கூட்டங்களில் கூறி வந்தார் இந்த நிலையில் திமுகவில் சீட் கேட்டு பலரும் தலைமையிடம் வலியுறுத்தி வந்தனர் குறிப்பாக வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஜெகன் மற்றும்
சென்ற முறை அதிமுகவிலிருந்து திமுகவிற்கு சென்ற சமயநல்லூர் டாக்டர் பாலமுருகன் ஆகியோர் குறிப்பிட்டு சொல்ல கூடிய அளவில் சோழவந்தான் தொகுதியை கேட்டு தலைமையை வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கட்சி தலைமை மீண்டும் வெங்கடேசன் எம்எல்ஏவுக்கு சீட்டை உறுதிசெய்தது இதனால் அதிர்ச்சி அடைந்த சமயநல்லூர் டாக்டர் பாலமுருகன் உடனடியாக அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திருமதி சசிகலா அவர்களை சந்தித்து கட்சியில் இணைந்ததுடன் உடனடியாக சோழவந்தான் தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் மட்டுமின்றி மாற்று கட்சியினரையும் சரி செய்யும் பணிகளில் இறங்கினார் இந்த நிலையில் அதிமுகவில் எம்எல்ஏ சீட் கேட்டு தலைமையை வலியுறுத்தி வந்த சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ கருப்பையா தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் ஒரே நாளில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களை செங்கோட்டையன் மூலம் சந்தித்து சோழவந்தான் தொகுதியின் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்களோடு பாலமேடு அருகே வளையபட்டியில் உள்ள மஞ்சமலை கோவிலுக்கு 300 முதல் 500க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தையும் தொடங்கினார்.

ஆனால் பிரச்சாரம் தொடங்கிய மறுநாள் முதல் திடீரென முடங்கிய எம் வி கருப்பையா தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை சந்திக்காமல் முடங்கி கடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெங்கடேசன் அலங்காநல்லூர் பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் முதல் இடமான வாவிடமருதூர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய வெங்கடேசன் எம் எல் ஏ அவர்களை திடீரென சந்தித்த எம் வி கருப்பையா அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ குறிப்பிட்ட சில தனியார் செய்தி சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது இதனை பார்த்த தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மற்றும் விஜயின் தீவிர ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது சோழவந்தான் தொகுதியில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வாக்குகள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில் முன்னால் எம்எல்ஏவான எம்வி கருப்பையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவர் சார்ந்த சமூக வாக்குகளும் கிடைக்கும் பட்சத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கூறப்பட்டது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ எம்வி கருப்பையாவின் திடீர் திமுக பாசம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. இதற்கு காரணம் திமுகவினர் தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதாக கூறி திருமதி சசிகலாவை அவர்களை சந்தித்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் பாலமுருகன் தற்போது தொகுதி முழுவதும் நன்கு அறியப்பட்டவராக கூறப்படும் நிலையில் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக அமைப்புகள் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்களை சந்தித்து தனக்கு ஆதரவு கேட்டு வருகிறார் இதனால் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இடையே சற்றே
கிளி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக அமைச்சர் மூர்த்தியின் தயவால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என நினைத்திருந்த தற்போதைய திமுக வேட்பாளர் வெங்கடேசன் எம் எல் ஏ தற்போதைய கள நிலவரம் கடும் சவாலாகி இருப்பதை உணர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் எம் வி கருப்பையாவை சரிகட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் களம் தெரிந்த பார்வையாளர்கள் கூறுகின்றனர் எம் வி கருப்பையாவும் மஞ்சமலை கோவிலுக்கு சாமி கும்பிட செல்லும்போது சென்ற கூட்டத்தில் பத்தில் ஒரு பகுதி கூட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வராதது பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் இடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க தமிழக வெற்றி கழகத்தின் தீவிர தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கும் கடைசி நாளான 6ம் தேதி வேட்பாளர் மாற்றப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் சார்ந்த வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது எது எப்படி இருப்பினும் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் தனி தொகுதியானது இந்த முறை அனைத்துக் கட்சிகளுக்கும் சவால் நிறைந்ததாகவே கூறப்படுகிறது
செய்திகள் : காலமேகம் எதிரொலி / 8939476777
