மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தென்னை மரத்தின் பச்சை ஓலை அறுந்து மின்சார வயர் மீது விழுந்ததில் மின்சாரம் தடைபட்டதாக கூறப்படுகிறது இதன் காரணமாக திருக்கோவில் முழுவதும் இருட்டான நிலையில் பக்தர்கள் பெண்கள் வழிபாடு செய்வதில் சிரமங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்காக பணியாளர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் போனை எடுக்கவில்லை என பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது 10 நாட்களுக்கு மேலாக கோவிலில் மின்சாரம் இல்லாமல் பெண்கள் மற்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பாற்ற சூழ்நிலை இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் பக்தர்கள் பொதுமக்கள் நலன் கருதி மின்சார வயர் மீது விழுந்துள்ள மரக் கிளைகளை அப்புறப்படுத்தி உடனடியாக கோவிலுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகளவு இருந்த நிலையில் கோவில் முழுவதும் மின்சாரம் இல்லாமல் அச்சத்துடன் சுவாமி வழிபாடு செய்துவிட்டு சென்றதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். உடனடியாக துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777
