
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
மற்றும் தண்டராம்பட்டு
சுற்று வட்டார பகுதிகளில் உள்ள
செல்போன் டவர் கம்பத்தில்
உள்ள பேட்டரி மற்றும் ஒயர்களை தொடர்ந்து திருடு போவதாக காவல்துறைக்கு வந்த புகாரின் பேரில், போலீசார் அப்பகுதிகளில் விசாரணை செய்து வந்தனர்.

அப்பொழுது செங்கம் அடுத்த
தீதாண்டபட்டு பாரியூர் கிராமத்தை சேர்ந்த, 1.அழகிரி வயது (31) 2.விஜயகுமார் (26) 3.பவன் குமார் (26) 4.விமல் (31) மற்றும் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த 5.ராஜாமணி (33) 6.குமார் (26) 7.காசி (24) 8.குணசெல்வம் (27) ஆகிய எட்டு பேர் கூட்டாக சேர்ந்து பல்வேறு செல்போன் டவர் கம்பங்களை நூற்றுக்கு மேற்பட்ட பேட்டரி மற்றும் ஒயர் திருடியதாக தெரிய வந்தது.
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த எட்டு பேர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் : செங்கம் செய்தியாளர், S.குகன்
