ஈரோடு மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இன்று மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதி மொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (25.01.2026) அன்று தேசிய வாக்காளர் தினமாகும், அதை முன்னிட்டு ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்லைவர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (23.01.2026) வாக்காளர் உறுதி மொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். அதில்,
“மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை-நிறுத்துவோம் என்றும்,

மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்.”
என்ற உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க, அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பின் தொடர்ந்து உறுதி மொழியினை ஏற்று கொண்டனர்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தேன்மொழி (பொது). ரமேஷ் கிருஷ்ணன் (வளர்ச்சி), வட்டாட்சியர் (தேர்தல்) சங்கர் கணேஷ் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : கிருஷ்ணன்
