தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026- யை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தேர்தலுக்காக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026- க்கான வாக்குப் பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வகுப்பில் நன்கு தெரிந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிட வேண்டுமென அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் , பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் ஞா.சரவண பெருமாள், வட்டாட்சியர்கள் வரதன், ராமமூர்த்தி , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777
