மேட்டு நீரேத்தான் கிராமத்தில் ஒரு பிரிவினர் கோவிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்த பெண்களால் பரபரப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் கிராம மக்களிடையே கோவிலில் வழிபாடு செய்வதில் பிரச்சனை இருந்து வருகிறது இந்நிலையில் கோவில் மந்தை அருகே சடையாண்டி கோவில் என்று ஒன்று உள்ளது.

இந்த கோவிலில் வரும் புதன்கிழமை விநாயகர் முருகன் சிலைகள் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக ஒரு தரப்பினர் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடமும் வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் மனு அளித்து அதனை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் இந்நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் திடீரென வருகின்ற புதன்கிழமை பிரதிஷ்டை செய்ய முழுவீச்சில் தயாராக இருப்பதாக தெரிகிறது இதனை அறிந்த கிராம பொதுமக்களின் மற்றொரு தரப்பை சேர்ந்த
பெண்கள் தங்களது ஆதார் கார்டு ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவிப்பதாக கூறினர்.

மேலும் இரு தரப்பினர் இடையே எதிர்ப்பு இருக்கும் நிலையில் கோவில் கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். தேர்தல் காலம் முடியும் வரையில் எந்த ஒரு தரப்பிற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட வாய்ப்புள்ளது உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் காவல்துறை பாதுகாப்பு வழங்கி எந்த நடவடிக்கையும் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்து தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது

செய்திகள் : காளமேகம் / மதுரை / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed