கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட த வெ க கட்சி சார்பில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி த வெ க மத்திய மாவட்ட கட்சி அலுவலகத்தில் மத்திய மாவட்ட த வெ க செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட த வெ க செயலாளர் வடிவேல் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு மட்டுமின்றி கழக நிர்வாகிகளுக்கும் தீபாவளி பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டி பட்டாசு பாக்ஸ், இனிப்பு வகைகள் மற்றும் குக்கர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

அப்போது த வெ க கட்சியை சேர்ந்த மூத்த முன்னோடி தென்னரசு, வடிவேல், ஏஜாஸ், நாகராஜ், சரவணன் உள்ளிட்ட மத்திய மாவட்ட த வெ க கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
செய்திகள் : மாருதி மனோ எதிரொலி . இன் / 8939476777
